15 November 2011

கல்யாண பங்ஷன் - ஜொள்ளான ஜங்ஷன்


கல்யாணத்துக்கு யாரெல்லாம் போயிருந்தீங்க?
நான், செந்திலு, ரமேஷண்ணன், ஜிராபி கார்த்தி, கிழட்டு கணேஷ்மாமன், ராஜாங்கம்.. அப்புறம் கடைசியாதான் வந்து சேந்தான் ஓட்ட.
ஓட்டயா? அப்படினா யாரு? அவந்தான் ஜீவராஜ். நோ மியூசிக். இவன் விநாயக் மாதிரியான போலிஸ்காரனல்ல.

திங்கள்கிழமை கல்யாணம். சனிக்கிழமை ராத்திரியே கிளம்பியாச்சு. பஸ்ல பயலுக பண்ணுன அலப்பறயினால தூங்குன மனுசங்கூட முழிச்சி எங்களுக்கு கேக்காதது மாதிரி திட்டினாங்க. இதுக்கெல்லாம் அசருத ஆளுங்க கிடையாது இந்தப் பயலுக. விடிகாலைலயே கல்யாண மாப்பிள்ளைய பஸ்டாண்டுல காக்க வச்சாச்சி. நாங்க வந்ததும் எங்களை அள்ளிக்கிட்டு போய்ட்டாரு. 

ஊரெல்லாம் தெலுங்கு வாசனையா இருந்துச்சி. 7 மணிக்கு பெரியாத்துக்கு குளிக்கப் போனோம். வயக்காட்டுல நெல்லு ‘எனக்கென்ன’னு சாஞ்சி கெடந்துச்சி. அத உருவி விதச்சுக்கிட்டே ஆத்துக்குப் போய்ச்சேந்தோம். ஆறு அகலமாத்தான் இருந்துச்சு. ஆனா ஆழமா இல்ல. ராத்திரி பெஞ்ச மழைனால தண்ணி கலங்கலா ஓடுச்சி. ஆனா கல்யாண மாப்ள எங்கள விட்டு எங்கயும் ஓடல. இதே எங்க ஊருல ஒருத்தனுக்கு கல்யாணம்னா ஒரு வாரத்துக்கு முன்னாடியே வீட்டு ஜெயில்லதான் இருப்பான். இந்த மனுசன் எங்ககூடவே அலைஞ்சாரு. மக்கன் திடீருன்னு போன போட்டான். கல்யாண வீட்டுக்கு வாரதுக்கு வழி மட்டும் கேட்டான். ரமேஷ் பய கூட சேந்து வரப்போறேன்னு மக்கா சொன்னதுமே தெரிஞ்சி போச்சி. இந்த ரெண்டு பயலுகளும் வரமாட்டானுகனு. குண்டு மணிக்கும் இதே கத தான்.

சாய்ங்காலம் மழை பிரிச்சு மேஞ்சுச்சி. மழை விட்டதும் பொண்ணு வீட்டுக்குப் போறதுக்கு ரெடியானோம். ரெண்டு ஜீப்பும் நாங்க இல்லாமலே நெறஞ்சிருச்சி. சரி பஸ்ல போவலாம்னு முடிவு பண்ணுனா இந்த கல்யாணம் ஆகப்போற மனுசன் எங்க கூடவே வந்து வழிய மட்டும் காட்டுவாருனு பாத்தா அந்த ஊருக்கே கூட்டிட்டே போய்ட்டாரு. என்ன பஸ்ல ஏறும்போது மாப்பிள்ள கையில இருந்த குடை இறங்கும் போது இல்ல. பயபுள்ளைங்க பஸ்லயே பட்டய போட்டுட்டானுக.

மண்டபத்துல எங்களுக்காக எல்லாரும் வெயிட்டிங்க். பின்ன கல்யாண மாப்பிள எங்ககூட வந்தா வெயிட் பண்ணித்தானே ஆகனும். நிச்சயதார்த்தம்னு ஒன்னு நடந்துச்சி. அங்க இருந்த பெருசுக எல்லாம் சத்தம் போட்டு சண்ட போடற மாதிரி பேசுனாங்க. ஏன்னா அவங்க பெருசுகனு எல்லாருக்கும் தெரியனுமாம்!  தட்டு மாத்துனதும் பொட்டு வச்சாரு மாப்பிள பொண்ணுக்கு.  இலய எப்படா போடுவாங்கனு ரமேஷண்ணன் வெரிக்க வெரிக்க பாத்துக்கிட்டு இருந்தாரு. செந்தில் பயலுக்கு கண்ணுல பசி. தேடிக்கிட்டே இருந்தான். இந்த நெடுமாடு ராஜாங்கம் பலுமாற ரெடியானான். கிழட்டு கணேஷ்மாமன் கிழவிகிட்ட பேசிக்கிட்ருந்தான். ஜிராபிக் கொள்ளு ஜொள்ளு விட்டுக்கிட்ருந்தான். சரி நான் என்ன பண்ணிகிட்டுருந்தேன்? நோ.. நோ.. பப்ளிக்.. பப்ளிக்…

மண்டபத்துல தூங்குரதுக்கு எடம் தேடி, மேடையே கிடச்சது. நட்ட நடு ராத்திரில தொறந்த வீட்டுல நாய் நொழஞ்ச மாதிரி வந்து சேந்தான் ஜீவராசு. பயபக்கி வரும் போதே வாசனையோட வந்தான். வேலைக்குப் போயி காசு,பணம் வந்தாலே கவர்மென்ட் கடையில ஒரு அக்கவுண்ட ஆரம்பிச்சிடுவாங்க போல. தள்ளாடி தள்ளாடி வந்தவன் செந்தில் மேல பொளேர்னு விளுந்தான். விடிஞ்சதுக்கப்புறம் வெந்நீர ஊத்துனதுகப்புறம்தான் எந்திருச்சான்.

மாப்பிள்ளய ஜோடிக்கிறதுக்கு முன்னாடியே நம்ம பயலுக மாப்பிள்ள தோரணையோட மண்டபத்துல மேய ஆரம்பிச்சாங்க. இவனுகளுக்குனே வந்து சிக்குசிக சில சிட்டுக. அவ்ளோ நேரம் எப்படா பந்திய போடுவாங்க மொத ஆளா உக்கார்லாம்னு நெனச்சிக்கிட்டு இருந்தவனுக சிட்டுகளைப் பாத்ததும் பரிமாறத் துடிச்சி பாயாசமும் ஊத்துனாங்க. ரமேஷண்ணன் போன் நம்பர பேப்பர்ல எழுதி வழியெல்லாம் தூவுனாரு. ஆனா அதுல புழுதி பட்டதுதான் மிச்சம். ஒன்னும் ஒர்க் அவுட் ஆகல. இத்தனைக்கும் கல்யாண மாப்பிள்ளைக்கி வாங்கி வச்சிருந்த சென்ட் எல்லாம் தன் மேல அடிச்சி ட்ரை பண்ணுனாரு. ம்ஹும்.. ஒருத்தரும் கண்டுக்கலயே! என்ன கொடும ணா இது? கீப் ட்ரையிங்க்.. கீப் ஆன் ட்ரையிங்க்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

தாலி கட்டி முடிச்சதும் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் க்ளோஸப், மிண்டோ ப்ரெஸ்லாம் கொடுத்து சிரிக்க சிரிக்க போட்டோ எடுத்தோம். இந்த கல்யாணமாகத ராஜகுரு பய மாப்பிள்ளய பாத்து அவருக்கு கேக்காதது மாதிரி சொல்றான் “சிரிடா சிரி. கல்யாணத்த முடிச்சிட்டல்ல. நீ சிரிக்கிற கடைசி சிரிப்பு இதுதாண்டா!”
மறுவீட்டுக்கு கெளப்பி வந்தோம். கோயிலுக்கு நடந்தோம். இந்த கல்யாணப் பொண்ணோட பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க, மாப்பிள்ளயும் பொண்ணும் சோடி சேர்ந்து போகவிடாம அவங்களுகிடையிலயே கடைசி வரைக்கும் வந்து மாப்பிள்ளயோட வயித்தெரிச்சல வாங்கி கட்டிக்கிச்சுங்க. நாங்க டெமோ காட்டியும் புரிஞ்சிக்காத பிள்ளைகளா இருந்ததுக. சரக்கு கேட்டு மாப்பிள்ளய ஒரு கும்பல் அட்டாக் பண்ணுச்சு. ஆனா அண்ணன் முருக்கு வாங்க கூட அவங்களுக்கு காசு கொடுக்கல.


அப்புறமா பொண்ணு வீட்டுக்கு வந்து மாப்பிள்ளய ஒப்படச்சிட்டு, பாக்க வேண்டியவங்களைப் பாத்துட்டு, அவரவர் ஊருக்குத் திரும்பியபோது பயலுக மனசுல வந்துட்டுப் போன கேள்வி “அடுத்த கல்யாணம் யாருக்கு?”



நீண்ட இடைவேளைக்குப் பிறகு நண்பர்களை ஒருங்கே சந்திப்பதென்பது இது போன்ற நிகழ்வுகளினால்தான் முடிகிறது. படித்த நாட்களிலிருந்த அதே மனநிலையையும், மகிழ்ச்சியினையும் மீட்க இயலுகிறது. நண்பர்களோடு இருந்த / இருக்கும் / இருக்கப் போகும் காலங்களுக்காகவே வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது!

20 July 2011

உன்னால் நான் 'காலி' ஆனேன்


1.       நம்பிக்கை ஏழைகளை உயிரோடு இருக்கச் செய்கிறது.
பயம் பணக்காரர்களை கொல்கிறது.

2.       அழுகை என்பது உன்னை பலவீனப் படுத்தும்,
சிரிப்பு மட்டுமே உன் எதிரியை பலவீனப் படுத்தும்
.

3.       உலகம் கெடுவது கெட்டவர்களால் மட்டுமல்ல,
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்களாலும்தான்.

4.       ஒருவரை உண்மையாக வெறுத்து விடு. ஆனால்
பொய்யாக நேசித்து விடாதே.

5.       மன்னிக்க மட்டும் கற்றுக்கொள். ஏனெனில் நம்மை ஏமாற்றியவர்களைக் கூட நாம் ஒருமுறையாவது நேசித்திருப்போம்.


6.       கேட்கும் கேள்விக்கு பெண்கள் சரியாகப் பதில் சொல்வது, எக்ஸாம் பேப்பரில் மட்டுமே!

7.       இன்று உன்னால் நான் காலி ஆனேன். நாளை
என்னால் நீ காலி ஆவாய் # மது பாட்டில் மனிதனிடம் சொன்னது.

8.       எதுவுமே நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தில் உங்கள் துக்கம் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்?

9.       வாழ்க்கை என்பது மொட்டுக்கள் நிரம்பிய மலர் தோட்டம்.
நாம் சிரிக்கும்போது மட்டுமே அவை பூக்கின்றன.

10.   தெரிந்தவர்களுக்கு உதவும் போது நாம் மனிதனாகிறோம்
தெரியாதவர்களுக்கு உதவும் போது கடவுளாகிறோம்.



   டிஸ்கி 1 :      ப்ளாக் தொடர்பான எனது சந்தேகத்தினை நீக்கி தொடர்ந்து பதிவெழுத வைத்த வந்தேமாதரம் சசிகுமார் சார்க்கு எனது நன்றிகள் பல. 
        
       டிஸ்கி 2 : எனது ப்ளாக்கிற்கு வருகை தந்துள்ள அன்பர்களே, கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துக்களை இட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.    


16 July 2011

முன்னும் பின்னும் மின்னும்


என் தவறை நீ சொன்னாய்
வந்தது கோபம்..
அத்தவறை நான் உணர்ந்தேன்
சூழ்ந்தது சோகம்..
முன்னதில் உன்னை இழந்தேன்
பின்னதில் என்னை அறிந்தேன்..
இழந்ததைப் பெற இயலாவிட்டால்
இல்லாமையே இந்த உலகமாகும்!
புரிந்து நாம் சேர்ந்துவிட்டால்
புன்னகையே நம் வாழ்க்கையாகும்!!




5 June 2011

அரிசி வாங்கலயோ... அரிசி...


               ஜுன் ஒன்றாம் தேதி ரேசனில் அரிசி போட்டார்கள். இதற்கு முன்னர் அரிசியுடன் சேர்த்து கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சேமியா இவற்றுள் ஏதேனும் ஒன்றை ரூபாய் 30 க்கு வாங்கினால் மட்டுமே அரிசி கொடுத்திருக்கிறார்கள். அதிலும் 20 கிலோ அரிசியில் 5 கிலோவும் 35 கிலோ அரிசியில் 10 கிலோவும் புழுத்துப்போன அரிசியைத்தான் தந்திருக்கிறார்கள். அந்த அரிசியை பறவைகூடத் தீண்டாது. அந்த அரிசியை வேண்டாம் என்று சொன்னால் 5 கிலோவுக்கு 5 ரூபாயும் 10 கிலோவுக்கு 10 ரூபாயும் திருப்பித் தந்திருக்கிறார்கள். ஆனால் பில்லில் எந்த மாற்றமும் செய்ய மாட்டார்கள். இப்படி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் குறைந்தது 5 கிலோவை ஆட்டயைப் போட்டு அதில் ஒரு கிலோ அரிசி ரூபாய் 5 க்கு வெளி இடங்களில் விற்று விடுவார்கள். மொத்தம் 820 குடும்ப அட்டைகள். இதன் மூலம் மாதா மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதித்திருப்பார்கள். ஆனால் இந்த மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசியை முழுமையாகத் தந்தார்கள். மேற்படி பொருட்கள் எதுவும் வாங்குவதற்கு நிர்பந்திக்கப்படவில்லை. அரிசி இந்த மாதம் பரவாயில்லை ரகம். ஏனென்றால் அரிசியில் குமட்டும் ஸ்மெல் இல்லை.

              அடுத்த இரண்டு நாட்கள் சீனி போட்டர்கள். 1 கிலோ சீனி வாங்கியவர்களிடம் மட்டும் சில்லறை இல்லையென்று சொல்லி ரூ.13.50 க்குப் பதிலாக ரூ.14 வசூலித்தார்கள். சீனியுடன் வழக்கமாக ரூ.13 மதிப்பிலான தேயிலை பாக்கெட்டை திணிப்பார்கள். ஆனால் இந்த முறை அப்படித் திணிக்கவில்லை.

                 நான்காவது நாள் மண்ணெண்ணெய் ஊற்றினார்கள். ஒரு குடும்ப அட்டைக்கு 3 லிட்டர். சில்லறைக்காக ரூ.34.50 ஐ ரூ.35 ஆக்கினார்கள் (இதன் மூலம் மட்டும் இன்றைய கமிஷனாக ரூ.200 கிடைத்திருக்கும்). இத்துடன் ரூ.10 மதிப்பிலான டிடர்ஜன்ட் சோப்பையும் திணித்து மொத்தமாக ஒரு குடும்ப அட்டைக்கு 45 வசூலித்தார்கள். வழக்கமாக பயன்படுத்தும் உருளை வடிவ லிட்டர் அளவைக்குப் பதிலாக கூம்பு வடிவ அளவியினைப் பயன்படுத்தினார்கள். மொத்தம் 400 குடும்ப அட்டைகள் பதியப்பட்டது. 380 குடும்ப அட்டைகளுக்கு  மட்டும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட்து. அத்துடன் மண்ணெண்ணெய் தீர்ந்து போனதால் மீதம் 20 குடும்ப அட்டைகளுக்கு அடுத்த தவணையின் போது மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்று சமாதனம் கூறி அனுப்பி வைத்தனர். கூட்டம் கலைந்த பின்னர் பேக்கர் பேசத் தொடங்கினார், “ஒரு பேரல் 200 லிட்டர்னு 6 பேரல்ல மொத்தம் 1200 லிட்டரு. எப்பவுமே ஒரு பேரல்ல 10 லிட்டர் கம்மியாதான் இருக்கும். பங்க்ல இருந்தே அப்டித்தான் அனுப்புவாங்க. இன்னைக்கி கூம்பு வச்சி ஊத்துனதுனாலதான் 60 லிட்டர் அடியாயிருச்சி. இல்லனா உருளைய வச்சி ஊத்தி ஒரு கார்டுக்கு 250 மில்லி அடிச்சி அத மத்த கார்டுகளுக்கு ஊத்தி பத்தாக்கொற இல்லாம 400 கார்டுக்கும் மேட்ச் பன்னிருவோம். இப்ப 20 கார்டுக்கு துட்டு வாங்கியாச்சு, ஆனா மண்ணெண்ண கொடுக்கல. 15-ந்தேதிக்கப்புறம் இன்னும் 400 பேரு வருவாங்க அவங்களுக்கும் கொடுக்கனும் இவங்களுக்கும் கொடுக்கனும். நான் என்ன செய்ய? மறுபடியும் உருளைய எடுத்தாதான் ஊத்த முடியும். அரிசி, சீனி இதெல்லாம் 100% ஸ்டாக் கொடுக்காங்க. ஆனா மண்ணெண்ண மட்டும் 80% தான் கொடுக்காங்க. அதிகாரிகளுக்கே தெரியும் மண்ணெண்ணய நாங்க அஜஷ் பன்னித்தான் கொடுப்போம்னு!”

அடுத்த மாசம் அரிசி ஃப்ரியா குடுப்பியளா? இல்ல மாவு வாங்குனாத்தான் அரிசி குடுப்பியளா?”

அந்த அம்மாகிட்ட நாளைக்கே எந்த கம்பனிகாரனாவது பெட்டிய கொடுத்துட்டு, இங்க வந்து மாவ எறக்குனாம்னா நாங்க அத வித்துதான ஆகனும்?!”

அதானே!”


சில கேள்விகள் :

* 35 கிலோ அரிசி பெற்று வரும் பெரும்பாலானவர்கள் எல்லாம் பெற்றவர்களாகவே உள்ளனர். தகுதியானவர்களுக்கு 20 கிலோ அரிசி கூட சரிவர கிடைப்பதில்லை. மீண்டும் அரசு இதில் தலையிட்டு தகுதியானவர்களைக் கண்டறிவார்களா?

* 50 பைசா சில்லறை திருட்டைத் தடுக்க ஏதும் வழிகள் உண்டா?

* தகுதியுடைய 100% குடும்ப அட்டைதார்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடு செய்வார்களா?

* அத்தியாவசிய பொருட்ளை வாங்கும் போது கட்டாயமாக வேறு சில பொருட்களை(சோப்பு, ஷாம்பூ…)யும் திணிப்பதைத் தடுக்க இயலுமா?

* இது குறித்து புகார் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை இதுநாள் வரை கண்டும் காணாமல் இருந்தது போல் இருப்பார்களா?

யாராவது பதில் சொல்லுங்களேன்…. ப்ளீஸ்…. 


27 May 2011

மாவீரன் - விமர்சனம்


சில  மாதங்களுக்கு முன்பு மகதீரா படத்தின் டி.வி.டி கிடைத்தது. அப்போதுதான் முதன் முதலில் தெலுங்கு படம் பார்க்கிறேன். மொழி புரியாவிட்டாலும் காட்சி அமைப்புகளே கதை சொல்லியதால் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. என் நண்பர்கள் வந்த போது அவர்களும் பார்த்து ரசித்தார்கள். மீண்டும் இப்படத்தை பார்பதற்காகவே என் வீட்டிற்கு வந்திருந்திருக்கிறார்கள். தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தை 'டாக்டர்'தான்  நடிப்பார் என்றார்கள். நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை. 




மாவீரனாக ராம்சரண் ஆக்சன் காட்சிகளில் மிரட்டுகிறார். காதல் காட்சிகளிலும் கலக்குகிறார். காஜல் அகர்வால் கண்களை விட்டு அகல மறுக்கிறார். அவ்வளவு அழகாகக் காட்டி இருக்கிறார்கள்.


படம் பார்த்த என் நண்பன் ஒருவன் இப்போது 'காதல் பித்து' தலைக்கேறி ஒரு காதலியை தேடிக்கொண்டிருக்கிறான். இத்தனை நாட்களாக மகதீரா டி.வி.டி கேட்டவன் இப்போது தமிழில் மாவீரனாகி வெளியானதால் தினமும் தியேட்டரிலேயே பார்க்க போகிறானாம்! நல்லது!



தென்காசி பரதனில் பதிண்மூன்று ரூபாய் டிக்கெட்டை 50 க்கு விற்றார்கள். படம் அந்த ரூபாய்க்கு பெறும் என்பதால் அவர்களை சும்மா விட்டு வந்தேன். தமிழில் இப்படத்தை வெளியிட்ட கீதா ஆர்ட்ஸ்க்கு நன்றி ...

பதிவு பிடிக்காவிட்டாலும் கீழே கமெண்ட் போடுங்கள். பிடித்திருந்தால் இன்ட்லியில் வோட்டு போடுங்கள்.

22 May 2011

எங்கள் ஊர் திருவிழா - 01


வெள்ளிக்கிழமை.

"ஏலேய்! எங்க இருக்க.....?"

"
கோயில்ல இருக்கேன்னே.. "

"என்னடே! மிஸ்டு கால் கொடுத்தா கூப்பிட மாட்டிய?  உனக்கு 10 பைசா தான..?!"

"இங்க பாட்டு சத்தத்துல ஒன்னும் கேக்கல மேன்! எனி இம்பார்டன்ட் மேட்டர்?"

"ஒண்ணுமில்ல தெக்க கடைக்கி போகணும்.."

"ஒரு நிமிஷம் பொறு ஒன்னும் கேக்கல.........  ஆங் ....    இப்ப சொல்லு..."

"தெக்க கடைக்கி போகணும்.."

"ஆங் .. சரி.. இன்னும் ட்வென்டி மினிட்ஸ்ல பூச முடிஞ்சுரும். இப்ப வந்துருவேன்!"

"ஏலே! அவள  நாளைக்கு பாருல...  உடனே வாடே.."

"தமிழ் நோட்ஸ் கொடுக்கணும். அத கொடுத்துட்டு வாரேன் மேன் ." 

"(எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறமா நீ என்ன நோட்ஸ் கொடுக்க போறன்னு எனக்கு தெரியாதாடே?)  சரி சீக்கிரம் வா.. எனக்கு பசிக்கிது".
                                                                                                                          

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை.. நியுட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை...

"ஹே... சௌந்தரு!!! என்னநல்லாருக்கியா?!" 

"ஹே... செந்திலு! எப்டி இருக்க?! வொர்க் முடிஞ்சுதா?!"

"ஆமா சௌந்தரு..! இப்பதான் வீட்டுக்கு வந்தேன்.." 

"ம்... அப்புறம்.... யாரும் போன் போட்டாகளா ?!"

"எங்க சௌந்தரு, நான்தான் போட வேண்டியதிருக்கு. ம்... அவளுக்கு போன் போட்டனா.. . இங்கரு.... 'ஹலோ.. யாரு வேணும்'னு கேக்குறா! உடனே அவ அப்பன் 'யாருமா'ன்னு கேட்டான். 'ஒன்னுமில்லப்பா'ன்னு சொல்லி டக்குனு வச்சுட்டா! ச்சே.... பேசவே இல்ல பா...!"

"ஏய்! அவதான் உன்ன கழட்டிவிட்டுடாளே! நீ வேறே ஆள பாக்க வேண்டியதுதானே!"

"எங்க பா.. மனசு கேக்க மாட்டேங்குது! எல்லாருக்கும் லைப் ஒண்ணுபோல வாய்க்குமா சௌந்தரு?"

"ஏய் செந்திலு.. இப்ப என்ன எதுக்கு தாக்குற..?!"

"ஹே.. நான் உன்ன சொல்லல பா! அது கோடில ஒண்ணுதான் அப்டி அமையும்! ஒவ்வொரு நாளையும் எப்டி மறக்க முடியும் சௌந்தரு? உனக்கு தெரியும்ன்னு நெனக்கேன்.. ஒருநாள் எல்.ஹெச். வாசல்ல அவகூட பேசிக்கிட்ருந்தேன் . மரத்தடில 'ஓட்ட' நின்னான். அந்த பக்கம் அய்யாதுரை பேசிக்கிட்டுருந்தார். டக்குனு திரும்பி பாத்தேன் பாரு.. பிரின்சிபால் வந்துட்டான். உடனே முள்ளுக்காட்டு வழியா ஓட்டையும் நானும் ஓடுனோம். பின்னாடி அய்யாதுரை 'ஏய்! நில்லுங்க பா நானும் வர்றேன்'னு ஓடியாந்தாரு பாரு..  ஒரு வழியா தப்பிச்சு வந்து... ச்சே.. அதெல்லாம் எப்டி மறக்க முடியும்?  ச்சே.. !."

"சரி! நீ என்னைக்கு உன் பழைய புராணத்தை நிறுத்தப் போறியோ அன்னைக்குதான் உருப்படுவ..!"


"அதானே இந்த நியாபகம் தான்  வந்து தொலைக்குது. மொதல்ல நல்ல வேலைக்கு போகணும்."

"சரி இங்க வந்து சாமிய கும்பிட்டுட்டு வேலைக்கு போ! ஊர்ல கோயில் கொட பா. நீ வந்துரு. அப்புறம் அங்க போறேன் இங்க போறேன் ன்னு சொல்லி மலத்திராத பா..!"

"ஹே! எப்ப சௌந்தர் கோயில் கொட?!"

"சித்திர மூணாம் செவ்வா. அதாம் பா வர்ற செவ்வா கால் நட்டு. அடுத்த செவ்வா கோயில் கொட.. நீ சனிக்கிழம சாயங்காலம் வொர்க்க முடிச்சுட்டு 3 நாள் லீவ் சொல்லிட்டு வந்துரு பா"

"வேற யாருகிட்டயும் சொன்னயா?"

"ஆமா இப்பதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிட்ட சொன்னேன். அவர் வாரேன்னு சொல்லிட்டாரு!"

"ஏ... காமெடி பண்ணாத பா.."

"இதுல என்ன பா ''  இருக்கு?!  நீயும் சூப்பர் ஸ்டார் தான?!"

"ஹே.. நம்ம ராஜகுரு, ஜிராபி கார்த்தி, கணேஷ் மாமன்  இவங்கள கூப்டைய பா?"

"அவங்க கிட்ட நான் சொல்லிக்குவேன். நீ வரும் பொது அவங்களை இழுத்துகிட்டு வந்திரு பா..."

"வேல்முருகன்ணன் வாராறா?"

"அத ரமேஷண்ணன் கிட்டதான் கேக்கணும்!"

"சரி அவர் வந்தா.. நானும் வாறேன்"

"அவர் வராட்டியும், நீ வா பா.."

"ஆங்... சரி ..  வாறேன். ஆமா சௌந்தரு... இந்த வி.ஏ.ஓ. டெஸ்ட் ல ஒரு 170 மார்க் வாங்கிருவேன் . வேலை கெடைக்குமா சௌந்தரு?" 

"கொஞ்ச நாள் பொறு கவுன்டிங் முடிஞ்சதும் 'முதல்வர்'கிட்ட கேட்டு சொல்றேன். இப்போதை நீ கோயில் கொடைக்கி வர்றதுக்கான வழியப்பாரு.."

                                                                                                                                 

"என்ன ராசு?! என்ன பண்ற?"

"ராஜாண்ணே! நான் ப்ளாக்கர் ஆகிருக்கேன்னே! அதன் முதல் பதிவ ரெடி  பண்ணிகிட்டிருக்கேன்!"

"அப்டியா?! ரெம்ப சந்தோசம். உன் பதிவ யாரவது திருடி அவங்க பதிவுல போட்டாங்கனா, என்ன பண்ணுவ டா?"

"அட..போங்கண்ணே! முதல்ல இத யாரவது படிகிறாங்களான்னு பாப்போம்!".