2 November 2012
20 October 2012
3 October 2012
WEIGHTAGE MARK DETAILS
இவ்வினாத்தாளில் ஆங்கில பகுதியில் இடம்பெற்றுள்ள 30 வினாக்களை தென்காசி மேலகரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பார் தயார் செய்து உதவியுள்ளார். ஆங்கிலத்திற்காகவே அவரால் நிர்வகிக்கப்படும் தளத்தைப் பார்வையிட்டுப் பயன்பெறவும் அவரைத் தொடர்பு கொள்ளவும் onlyenglish.webs.com இதில் அழுத்துங்கள்.
22 September 2012
TET EXAM STUDY MATERIAL
TET - MATERIAL - 01
இது ஏற்கனவே பாட வாரியாக தனித்தனியாக வெளியிடப்பட்டவற்றின் ஒட்டுமொத்த தொகுப்பாகும். தனித்தனியாக DOWNLOAD செய்து பயன்படுத்தியவர்களுக்கு ஒட்டு மொத்தமாக ஒரே தொகுப்பாகத் தேவைப்பட்டாலும், இதுவரை DOWNLOAD செய்யாமல் இப்போது புதிதாக DOWNLOAD செய்பவர்களும் இதை DOWNLOAD செய்து பயன்பெறலாம். இதில் கல்வி உளவியல் ( D.T.ED Old & New Syllabus ) தமிழ் ( I to V & VIII ), அறிவியல் ( I to VIII ), சமூக அறிவியல் (III to V ) ஆகிய பாடங்களும் ENGLISH METHODOLOGY பாடமும், ஐந்து மாதிரி தேர்வுத்தாள்களும் உள்ளன. மொத்த பக்கங்கள் 198. PDF FILE இன் அளவு 2.83MB.
SOCIAL SCIENCE - V STD
( TET - MATERIAL - 01 இல்ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் விடுபட்டுள்ளதால் தற்போது இங்கு தனியாகக் கொடுத்துள்ளேன். சுட்டிக்காட்டியவருக்கு நன்றி. மொத்த பக்கங்கள் 13. PDF இன் அளவு 696 KB.)
TET - MATERIAL - 02
இது முழுமையாக இணையத்தில் தேடித் தொகுத்ததாகும். இதில் கணிதம் தவிர பிற பாடங்கள் உள்ளன. மொத்த பக்கங்கள் 177. PDF FILE இன் அளவு 1.89MB.
MATHS - STUDY MATERIAL
இது ஒரு சிறப்பிதழில் வெளிவந்தது. இதில் கணித கருத்துக்களும், வினாக்களும், அதற்கான விடைகளை முழுமையான விளக்கத்துடனும் கொடுத்துள்ளனர். அனைவரும் இதனைப் பயன்படுத்தும் பொருட்டு Scan செய்து இங்கு பதிவேற்றியுள்ளேன். மொத்த பக்கங்கள் : 50, PDF இன் அளவு 11.6 MB.
12 September 2012
TNTET STUDY MATERIAL
TET EXAM
க்கு Study Material சிலர் கேட்கிறார்கள். I முதல் X வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களை விடச் சிறந்த material
ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. TET தேர்வு எழுத தயாராக இருக்க வேண்டியவர்கள் சமச்சீர் புத்தகங்களை முழுமையாக வாசியுங்கள். நடைமுறை வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி புத்தகங்களை வாசித்தாலே நீண்ட நாள் அது நினைவிலிருக்கும். TET EXAM இல் கேட்கப்படும் கேள்விகள் Multiple Choice Questions களாக இருப்பதனால் அதற்கான விடைகளை நினைவு கூர்ந்தாலே போதுமானது. எனவே பாடங்களை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. புரிந்து கொண்டாலே போதுமானது.
இதையும் தாண்டி
Material வேண்டும் என்பவர்களுக்கு இதுவரை தொகுத்தவற்றை கீழே கொடுத்துள்ளேன் அதை Download செய்து வாசிக்கலாம். இதில் 1 முதல் 5 வகுப்புகளுக்கான அனைத்து பாடங்களும் 6 முதல் 8 வரைக்குமான அறிவியல் பாடங்கள் மட்டும் உள்ளன. இவையாவும் கடந்த TET தேர்வுகாக தயார் செய்யப்பட்டவை. TET வினாக்கள் பாடத்திட்டத்தின் அமையுமென்பதை இப்பொழுது உறுதியாக சொல்வதற்கில்லை. எனவே இது பயன்படுமா என்பதை சிந்தித்த பின் Download செய்யுங்கள். இல்லையேல் உங்கள் நேரத்தை இதில் செலவிடாமல் பாடப்புத்தகங்களைப் படியுங்கள்.
வேறு ஏதேனும் TET தொடர்பாக ஏதேனும் சொல்வதாக இருந்தாலோ அல்லது கேட்பதாக இருந்தாலோ napoos@ymail.com
க்கு Mail பண்ணுங்க. Rate cutter போட்டிருந்தால் Idea:8608225854 / Aircel: 9659966192 க்கு Call
பண்ணுங்க.
01. TET STUDY MATERIAL
02. TET STUDY MATERIAL
How to download TET study material from ziddu.com? Click here
02. TET STUDY MATERIAL
How to download TET study material from ziddu.com? Click here
25 August 2012
TET RESULTS - 2012
TN TET PAPER 1 & PAPER 2 RESULTS - Click here

தினமலர் செய்தி :
ஜூலை 12ம் தேதி நடந்த
ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,)
முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு
எழுதிய, 6.72 லட்சம் பேரில்,
2,448
பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 25 ஆயிரம் பேரை தேர்வு
செய்ய
நடத்திய தேர்வில், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி
பெற்றிருப்பதால், அக்., 3ம் தேதி, மீண்டும் ஒரு
தேர்வை நடத்த, டி.ஆர்.பி.,
முடிவு செய்துள்ளது.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேரம்
வழங்கவில்லை என, எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்டோபரில் நடக்கும்
தேர்வுக்கு, 3 மணி நேரம்
வழங்கப்படும் எனவும் டி.ஆர்.பி.,
அறிவித்துள்ளது.
ஜூலை 12ம் தேதி, டி.ஆர்.பி., நடத்திய முதல் தகுதித் தேர்வில், 6 லட்சத்து,
ஜூலை 12ம் தேதி, டி.ஆர்.பி., நடத்திய முதல் தகுதித் தேர்வில், 6 லட்சத்து,
72 ஆயிரத்து, 204 பேர் பங்கேற்றனர். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்
ஆகிய இரண்டுமே
கடினமாக இருந்ததாகவும்; போதிய அளவிற்கு நேரம்
வழங்கவில்லை எனவும், தேர்வர்கள் குற்றம்
சாட்டினர்.அதற்கு
தகுந்தாற்போல்,
நேற்று வெளியான தேர்வு முடிவும்
அமைந்தது. தேர்வு
எழுதிய 6.72 லட்சம் பேரில்,
வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
மொத்த தேர்ச்சி சதவீதம் 0.36.
தலைவர் பேட்டி:
தேர்வு முடிவுகள், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று அதிகாலை
வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து,
தேர்வு முடிவு குறித்த புள்ளி
விவரங்களை, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி வெளியிட்டார்.அப்போது,
நிருபர்களிடம் அவர்
கூறியதாவது:முதல் தாள் தேர்வில், 1,735 பேரும், இரண்டாம் தாள்
தேர்வில், 713 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில்
சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்தப்படும். விண்ணப்பத்திலும், விடைத்தாளிலும்
கேட்கப்பட்ட அடிப்படை
விவரங்களை சரிவரச் செய்யாத தேர்வர்களுக்கு,
அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண்
குறைக்கப்பட்டுள்ளது.கையெழுத்தில் வித்தியாசம் இருந்ததால், இரு
தேர்வர்களுக்கு, டி.ஆர்.பி., தேர்வில் பங்கேற்க, ஐந்தாண்டுகள் தடை
விதிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வில், 685 பேருக்கும்; இரண்டாம் தாள்
தேர்வில், 1,547 பேருக்கும், அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, உரிய
தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இரு
தேர்வர், தங்கள் அசல் விடைத்தாள்
நகலை ஒப்படைக்காததால், அவர்களுடைய தேர்வு
ரத்து செய்யப்பட்டது.
தரமானதேர்வு:
தேர்வில், குறைந்த தேர்ச்சி சதவீதம் ஏற்பட்டிருப்பது குறித்து, அரசின்
கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவ, மாணவியரின்
எதிர்காலத்தையும், தரமான கல்வித் தரத்தை ஏற்படுத்துவதையும் கருத்தில்
கொண்டும், 60 சதவீத மதிப்பெண் பெறுபவர் மட்டுமே தேர்ச்சி என்ற
நிலையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு, அரசு அறிவுறுத்தியது.தரமான
ஆசிரியரை பணியில் அமர்த்தினால் தான், தரமான கல்வியை வழங்க
முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அக்., 3ல் மீண்டும்...:
அத்துடன், 60 சதவீத மதிப்பெண் பெறாத தேர்வருக்காக, மீண்டும் ஒரு
வாய்ப்பு வழங்கும் வகையில், மற்றொரு டி.இ.டி., தேர்வை உடனடியாக
நடத்தவும், அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்., 3ம் தேதி, அடுத்த
டி.இ.டி., தேர்வு
நடக்கும்.இதன் முடிவு, அக்., இறுதிக்குள் வெளியிடப்படும்.
ஏற்கனவே நடந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறாத
தேர்வர் மட்டுமே,
இந்தத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.இந்தத் தேர்வுக்காக, தனியாக
விண்ணப்பிக்கவோ, தேர்வுக் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை.
புதிய, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படும்; அதில் குறிப்பிடும்
மையங்களுக்குச்
சென்று தேர்வு எழுதினால் போதும்.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய
நேர அவகாசம்
வழங்கவில்லை என, கடும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து,
அக்., 3ல் நடக்கும்,முதல் மற்றும்
இரண்டாம் தாள் ஆகிய இரண்டு
தேர்வுக்கும், தலா 3 மணி நேரம் வழங்கப்படும்.
மாற்றம் இல்லை:
கேள்வித்தாள் கடினமாக இருந்தது என, அனைவரும் கூறினர். ஆனால்,
இந்தத் தேர்விலும்,
இத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
குறிப்பாக, பெண்கள் அதிகளவு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களால்
மட்டும் எப்படி
முடிந்தது?கேள்வித்தாள் அமைப்பை புரிந்து, தேர்வுக்கு
முழுவதுமாக தயாரானால், கண்டிப்பாக
தேர்ச்சி பெற முடியும். அடுத்து
நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில், எவ்வித மாற்றமும்
இருக்காது. ஏற்கனவே இருந்த அதே தரம், தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
கேள்வித்தாள் தரத்தில், சமரசம் கிடையாது.இதுவரை, 13 ஆயிரம்
ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதி
செய்யப்பட்டுள்ளது. அக்.,
இறுதிக்குள், மேலும், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி
முடிவடையும்.இவ்வாறு சுர்ஜித்
சவுத்ரி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)