Showing posts with label நண்பன். Show all posts
Showing posts with label நண்பன். Show all posts

9 January 2012

நண்பன்



நம் எல்லோருக்கும் தேவை யாரோ ஒருவர்
வாழ்வில் நம்முடன் உரையாடிடத் தானே
துன்பத்திலும், மன அழுத்தத்திலும் நாம் ஓடி
தேடிச்சென்றடைவது நம் நண்பனைத் தானே.

நண்பன் ஒருவன் எப்பொழுதும் அங்கே
காத்திருப்பான் காலங்கள் முழுவதும் தானே
நண்பன் நம்மை காப்பது தானே
நம் அச்சத்தை நீக்கத் தானே.

நண்பன் எப்பொழுதும் இருப்பான் அருகில்
காத்திருப்பான் நம் குரலின் அழைப்பில்
துடைக்க காத்திருப்பான் நம் கண்ணீரை
தாங்கிப் பிடிப்பான் நாம் வீழும் போது.

அன்பு நண்பனை உண்மையாக
சார்ந்திருப்போம் நாம் அவனை தன்மையாக
தேவைகளை நிறைவேற்றிடும் என் நண்பனே
நன்றிகள் உனக்கு என் அரிய நண்பனே.
                         
-          Sammy Lane Sharp