கல்யாணத்துக்கு
யாரெல்லாம் போயிருந்தீங்க?
நான், செந்திலு, ரமேஷண்ணன், ஜிராபி கார்த்தி, கிழட்டு கணேஷ்மாமன், ராஜாங்கம்.. அப்புறம் கடைசியாதான் வந்து சேந்தான் ஓட்ட.
ஓட்டயா? அப்படினா யாரு? அவந்தான் ஜீவராஜ். நோ மியூசிக். இவன் விநாயக் மாதிரியான போலிஸ்காரனல்ல.
நான், செந்திலு, ரமேஷண்ணன், ஜிராபி கார்த்தி, கிழட்டு கணேஷ்மாமன், ராஜாங்கம்.. அப்புறம் கடைசியாதான் வந்து சேந்தான் ஓட்ட.
ஓட்டயா? அப்படினா யாரு? அவந்தான் ஜீவராஜ். நோ மியூசிக். இவன் விநாயக் மாதிரியான போலிஸ்காரனல்ல.
திங்கள்கிழமை கல்யாணம்.
சனிக்கிழமை ராத்திரியே கிளம்பியாச்சு. பஸ்ல பயலுக பண்ணுன அலப்பறயினால தூங்குன மனுசங்கூட
முழிச்சி எங்களுக்கு கேக்காதது மாதிரி திட்டினாங்க. இதுக்கெல்லாம் அசருத ஆளுங்க கிடையாது
இந்தப் பயலுக. விடிகாலைலயே கல்யாண மாப்பிள்ளைய பஸ்டாண்டுல காக்க வச்சாச்சி. நாங்க வந்ததும்
எங்களை அள்ளிக்கிட்டு போய்ட்டாரு.
ஊரெல்லாம் தெலுங்கு வாசனையா இருந்துச்சி. 7 மணிக்கு பெரியாத்துக்கு குளிக்கப் போனோம்.
வயக்காட்டுல நெல்லு ‘எனக்கென்ன’னு சாஞ்சி கெடந்துச்சி. அத உருவி விதச்சுக்கிட்டே ஆத்துக்குப்
போய்ச்சேந்தோம். ஆறு அகலமாத்தான் இருந்துச்சு. ஆனா ஆழமா இல்ல. ராத்திரி பெஞ்ச மழைனால
தண்ணி கலங்கலா ஓடுச்சி. ஆனா கல்யாண மாப்ள எங்கள விட்டு எங்கயும் ஓடல. இதே எங்க ஊருல
ஒருத்தனுக்கு கல்யாணம்னா ஒரு வாரத்துக்கு முன்னாடியே வீட்டு ஜெயில்லதான் இருப்பான்.
இந்த மனுசன் எங்ககூடவே அலைஞ்சாரு. மக்கன் திடீருன்னு போன போட்டான். கல்யாண வீட்டுக்கு
வாரதுக்கு வழி மட்டும் கேட்டான். ரமேஷ் பய கூட சேந்து வரப்போறேன்னு மக்கா சொன்னதுமே
தெரிஞ்சி போச்சி. இந்த ரெண்டு பயலுகளும் வரமாட்டானுகனு. குண்டு மணிக்கும் இதே கத தான்.
சாய்ங்காலம் மழை
பிரிச்சு மேஞ்சுச்சி. மழை விட்டதும் பொண்ணு வீட்டுக்குப் போறதுக்கு ரெடியானோம். ரெண்டு
ஜீப்பும் நாங்க இல்லாமலே நெறஞ்சிருச்சி. சரி பஸ்ல போவலாம்னு முடிவு பண்ணுனா இந்த கல்யாணம்
ஆகப்போற மனுசன் எங்க கூடவே வந்து வழிய மட்டும் காட்டுவாருனு பாத்தா அந்த ஊருக்கே கூட்டிட்டே
போய்ட்டாரு. என்ன பஸ்ல ஏறும்போது மாப்பிள்ள கையில இருந்த குடை இறங்கும் போது இல்ல.
பயபுள்ளைங்க பஸ்லயே பட்டய போட்டுட்டானுக.
மண்டபத்துல எங்களுக்காக
எல்லாரும் வெயிட்டிங்க். பின்ன கல்யாண மாப்பிள எங்ககூட வந்தா வெயிட் பண்ணித்தானே ஆகனும்.
நிச்சயதார்த்தம்னு ஒன்னு நடந்துச்சி. அங்க இருந்த பெருசுக எல்லாம் சத்தம் போட்டு சண்ட
போடற மாதிரி பேசுனாங்க. ஏன்னா அவங்க பெருசுகனு எல்லாருக்கும் தெரியனுமாம்! தட்டு மாத்துனதும் பொட்டு வச்சாரு மாப்பிள பொண்ணுக்கு.
இலய எப்படா போடுவாங்கனு ரமேஷண்ணன் வெரிக்க
வெரிக்க பாத்துக்கிட்டு இருந்தாரு. செந்தில் பயலுக்கு கண்ணுல பசி. தேடிக்கிட்டே இருந்தான்.
இந்த நெடுமாடு ராஜாங்கம் பலுமாற ரெடியானான். கிழட்டு கணேஷ்மாமன் கிழவிகிட்ட பேசிக்கிட்ருந்தான்.
ஜிராபிக் கொள்ளு ஜொள்ளு விட்டுக்கிட்ருந்தான். சரி நான் என்ன பண்ணிகிட்டுருந்தேன்?
நோ.. நோ.. பப்ளிக்.. பப்ளிக்…
மண்டபத்துல தூங்குரதுக்கு
எடம் தேடி, மேடையே கிடச்சது. நட்ட நடு ராத்திரில தொறந்த வீட்டுல நாய் நொழஞ்ச மாதிரி
வந்து சேந்தான் ஜீவராசு. பயபக்கி வரும் போதே வாசனையோட வந்தான். வேலைக்குப் போயி காசு,பணம்
வந்தாலே கவர்மென்ட் கடையில ஒரு அக்கவுண்ட ஆரம்பிச்சிடுவாங்க போல. தள்ளாடி தள்ளாடி வந்தவன்
செந்தில் மேல பொளேர்னு விளுந்தான். விடிஞ்சதுக்கப்புறம் வெந்நீர ஊத்துனதுகப்புறம்தான்
எந்திருச்சான்.
தாலி கட்டி முடிச்சதும்
பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் க்ளோஸப், மிண்டோ ப்ரெஸ்லாம் கொடுத்து சிரிக்க சிரிக்க
போட்டோ எடுத்தோம். இந்த கல்யாணமாகத ராஜகுரு பய மாப்பிள்ளய பாத்து அவருக்கு கேக்காதது
மாதிரி சொல்றான் “சிரிடா சிரி. கல்யாணத்த முடிச்சிட்டல்ல. நீ சிரிக்கிற கடைசி சிரிப்பு
இதுதாண்டா!”
மறுவீட்டுக்கு
கெளப்பி வந்தோம். கோயிலுக்கு நடந்தோம். இந்த கல்யாணப் பொண்ணோட பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க,
மாப்பிள்ளயும் பொண்ணும் சோடி சேர்ந்து போகவிடாம அவங்களுகிடையிலயே கடைசி வரைக்கும் வந்து
மாப்பிள்ளயோட வயித்தெரிச்சல வாங்கி கட்டிக்கிச்சுங்க. நாங்க டெமோ காட்டியும் புரிஞ்சிக்காத
பிள்ளைகளா இருந்ததுக. சரக்கு கேட்டு மாப்பிள்ளய ஒரு கும்பல் அட்டாக் பண்ணுச்சு. ஆனா
அண்ணன் முருக்கு வாங்க கூட அவங்களுக்கு காசு கொடுக்கல.
நீண்ட இடைவேளைக்குப்
பிறகு நண்பர்களை ஒருங்கே சந்திப்பதென்பது இது போன்ற நிகழ்வுகளினால்தான் முடிகிறது.
படித்த நாட்களிலிருந்த அதே மனநிலையையும், மகிழ்ச்சியினையும் மீட்க இயலுகிறது. நண்பர்களோடு
இருந்த / இருக்கும் / இருக்கப் போகும் காலங்களுக்காகவே வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாகத்
தோன்றுகிறது!
“அடுத்த கல்யாணம் யாருக்கு?”
ReplyDeleteபங்ஷன் ஜங்ஷன் வாழ்த்துகள்.
ada yempa photoku mattum munna nikra rameshkum ipti 1 function vaingapa
ReplyDeleteasathitinga elarum,ana ramesh mattum yn photola muraikiraru?
ReplyDeleteஇடையிடையே இணைத்துள்ள துணுக்குகள் நன்றாக இருந்தது...
ReplyDeleteஎல்லாரும் சேர்ந்து ஒரு வழி பண்ணிட்டிங்க போல...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution
மத்ததெல்லாம் ஓக்கே. கடலை போட்டதை பத்தி மட்டும் எனக்கு தனி மெயில் பண்ணுங்க
ReplyDeleteகல்யாண மாப்ளை மூலிகை பெட்ரோல் ராமர் சாயல் அவ்வ்வ்
ReplyDeleteஉங்கள் நண்பனுக்கு என் இனி இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநானும் இடைகால் நண்பர் என்பதை அன்புடன் கூறி கொள்கிறேன்
அருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
வணக்கம் நண்பரே தங்களது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.நன்றி
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/03/blog-post.html