சில மாதங்களுக்கு முன்பு மகதீரா படத்தின் டி.வி.டி கிடைத்தது. அப்போதுதான் முதன் முதலில் தெலுங்கு படம் பார்க்கிறேன். மொழி புரியாவிட்டாலும் காட்சி அமைப்புகளே கதை சொல்லியதால் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. என் நண்பர்கள் வந்த போது அவர்களும் பார்த்து ரசித்தார்கள். மீண்டும் இப்படத்தை பார்பதற்காகவே என் வீட்டிற்கு வந்திருந்திருக்கிறார்கள். தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தை 'டாக்டர்'தான் நடிப்பார் என்றார்கள். நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை.
மாவீரனாக ராம்சரண் ஆக்சன் காட்சிகளில் மிரட்டுகிறார். காதல் காட்சிகளிலும் கலக்குகிறார். காஜல் அகர்வால் கண்களை விட்டு அகல மறுக்கிறார். அவ்வளவு அழகாகக் காட்டி இருக்கிறார்கள்.
படம் பார்த்த என் நண்பன் ஒருவன் இப்போது 'காதல் பித்து' தலைக்கேறி ஒரு காதலியை தேடிக்கொண்டிருக்கிறான். இத்தனை நாட்களாக மகதீரா டி.வி.டி கேட்டவன் இப்போது தமிழில் மாவீரனாகி வெளியானதால் தினமும் தியேட்டரிலேயே பார்க்க போகிறானாம்! நல்லது!
தென்காசி பரதனில் பதிண்மூன்று ரூபாய் டிக்கெட்டை 50 க்கு விற்றார்கள். படம் அந்த ரூபாய்க்கு பெறும் என்பதால் அவர்களை சும்மா விட்டு வந்தேன். தமிழில் இப்படத்தை வெளியிட்ட கீதா ஆர்ட்ஸ்க்கு நன்றி ...
பதிவு பிடிக்காவிட்டாலும் கீழே கமெண்ட் போடுங்கள். பிடித்திருந்தால் இன்ட்லியில் வோட்டு போடுங்கள்.
கலக்கல் விமர்சனம்..
ReplyDeleteஆம் யார் இந்த பாபா ராம்தேவ் ? ...
நன்றி வேடந்தாங்கல் கருன்..
ReplyDelete