27 May 2011

மாவீரன் - விமர்சனம்


சில  மாதங்களுக்கு முன்பு மகதீரா படத்தின் டி.வி.டி கிடைத்தது. அப்போதுதான் முதன் முதலில் தெலுங்கு படம் பார்க்கிறேன். மொழி புரியாவிட்டாலும் காட்சி அமைப்புகளே கதை சொல்லியதால் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. என் நண்பர்கள் வந்த போது அவர்களும் பார்த்து ரசித்தார்கள். மீண்டும் இப்படத்தை பார்பதற்காகவே என் வீட்டிற்கு வந்திருந்திருக்கிறார்கள். தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தை 'டாக்டர்'தான்  நடிப்பார் என்றார்கள். நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை. 




மாவீரனாக ராம்சரண் ஆக்சன் காட்சிகளில் மிரட்டுகிறார். காதல் காட்சிகளிலும் கலக்குகிறார். காஜல் அகர்வால் கண்களை விட்டு அகல மறுக்கிறார். அவ்வளவு அழகாகக் காட்டி இருக்கிறார்கள்.


படம் பார்த்த என் நண்பன் ஒருவன் இப்போது 'காதல் பித்து' தலைக்கேறி ஒரு காதலியை தேடிக்கொண்டிருக்கிறான். இத்தனை நாட்களாக மகதீரா டி.வி.டி கேட்டவன் இப்போது தமிழில் மாவீரனாகி வெளியானதால் தினமும் தியேட்டரிலேயே பார்க்க போகிறானாம்! நல்லது!



தென்காசி பரதனில் பதிண்மூன்று ரூபாய் டிக்கெட்டை 50 க்கு விற்றார்கள். படம் அந்த ரூபாய்க்கு பெறும் என்பதால் அவர்களை சும்மா விட்டு வந்தேன். தமிழில் இப்படத்தை வெளியிட்ட கீதா ஆர்ட்ஸ்க்கு நன்றி ...

பதிவு பிடிக்காவிட்டாலும் கீழே கமெண்ட் போடுங்கள். பிடித்திருந்தால் இன்ட்லியில் வோட்டு போடுங்கள்.

22 May 2011

எங்கள் ஊர் திருவிழா - 01


வெள்ளிக்கிழமை.

"ஏலேய்! எங்க இருக்க.....?"

"
கோயில்ல இருக்கேன்னே.. "

"என்னடே! மிஸ்டு கால் கொடுத்தா கூப்பிட மாட்டிய?  உனக்கு 10 பைசா தான..?!"

"இங்க பாட்டு சத்தத்துல ஒன்னும் கேக்கல மேன்! எனி இம்பார்டன்ட் மேட்டர்?"

"ஒண்ணுமில்ல தெக்க கடைக்கி போகணும்.."

"ஒரு நிமிஷம் பொறு ஒன்னும் கேக்கல.........  ஆங் ....    இப்ப சொல்லு..."

"தெக்க கடைக்கி போகணும்.."

"ஆங் .. சரி.. இன்னும் ட்வென்டி மினிட்ஸ்ல பூச முடிஞ்சுரும். இப்ப வந்துருவேன்!"

"ஏலே! அவள  நாளைக்கு பாருல...  உடனே வாடே.."

"தமிழ் நோட்ஸ் கொடுக்கணும். அத கொடுத்துட்டு வாரேன் மேன் ." 

"(எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறமா நீ என்ன நோட்ஸ் கொடுக்க போறன்னு எனக்கு தெரியாதாடே?)  சரி சீக்கிரம் வா.. எனக்கு பசிக்கிது".
                                                                                                                          

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை.. நியுட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை...

"ஹே... சௌந்தரு!!! என்னநல்லாருக்கியா?!" 

"ஹே... செந்திலு! எப்டி இருக்க?! வொர்க் முடிஞ்சுதா?!"

"ஆமா சௌந்தரு..! இப்பதான் வீட்டுக்கு வந்தேன்.." 

"ம்... அப்புறம்.... யாரும் போன் போட்டாகளா ?!"

"எங்க சௌந்தரு, நான்தான் போட வேண்டியதிருக்கு. ம்... அவளுக்கு போன் போட்டனா.. . இங்கரு.... 'ஹலோ.. யாரு வேணும்'னு கேக்குறா! உடனே அவ அப்பன் 'யாருமா'ன்னு கேட்டான். 'ஒன்னுமில்லப்பா'ன்னு சொல்லி டக்குனு வச்சுட்டா! ச்சே.... பேசவே இல்ல பா...!"

"ஏய்! அவதான் உன்ன கழட்டிவிட்டுடாளே! நீ வேறே ஆள பாக்க வேண்டியதுதானே!"

"எங்க பா.. மனசு கேக்க மாட்டேங்குது! எல்லாருக்கும் லைப் ஒண்ணுபோல வாய்க்குமா சௌந்தரு?"

"ஏய் செந்திலு.. இப்ப என்ன எதுக்கு தாக்குற..?!"

"ஹே.. நான் உன்ன சொல்லல பா! அது கோடில ஒண்ணுதான் அப்டி அமையும்! ஒவ்வொரு நாளையும் எப்டி மறக்க முடியும் சௌந்தரு? உனக்கு தெரியும்ன்னு நெனக்கேன்.. ஒருநாள் எல்.ஹெச். வாசல்ல அவகூட பேசிக்கிட்ருந்தேன் . மரத்தடில 'ஓட்ட' நின்னான். அந்த பக்கம் அய்யாதுரை பேசிக்கிட்டுருந்தார். டக்குனு திரும்பி பாத்தேன் பாரு.. பிரின்சிபால் வந்துட்டான். உடனே முள்ளுக்காட்டு வழியா ஓட்டையும் நானும் ஓடுனோம். பின்னாடி அய்யாதுரை 'ஏய்! நில்லுங்க பா நானும் வர்றேன்'னு ஓடியாந்தாரு பாரு..  ஒரு வழியா தப்பிச்சு வந்து... ச்சே.. அதெல்லாம் எப்டி மறக்க முடியும்?  ச்சே.. !."

"சரி! நீ என்னைக்கு உன் பழைய புராணத்தை நிறுத்தப் போறியோ அன்னைக்குதான் உருப்படுவ..!"


"அதானே இந்த நியாபகம் தான்  வந்து தொலைக்குது. மொதல்ல நல்ல வேலைக்கு போகணும்."

"சரி இங்க வந்து சாமிய கும்பிட்டுட்டு வேலைக்கு போ! ஊர்ல கோயில் கொட பா. நீ வந்துரு. அப்புறம் அங்க போறேன் இங்க போறேன் ன்னு சொல்லி மலத்திராத பா..!"

"ஹே! எப்ப சௌந்தர் கோயில் கொட?!"

"சித்திர மூணாம் செவ்வா. அதாம் பா வர்ற செவ்வா கால் நட்டு. அடுத்த செவ்வா கோயில் கொட.. நீ சனிக்கிழம சாயங்காலம் வொர்க்க முடிச்சுட்டு 3 நாள் லீவ் சொல்லிட்டு வந்துரு பா"

"வேற யாருகிட்டயும் சொன்னயா?"

"ஆமா இப்பதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிட்ட சொன்னேன். அவர் வாரேன்னு சொல்லிட்டாரு!"

"ஏ... காமெடி பண்ணாத பா.."

"இதுல என்ன பா ''  இருக்கு?!  நீயும் சூப்பர் ஸ்டார் தான?!"

"ஹே.. நம்ம ராஜகுரு, ஜிராபி கார்த்தி, கணேஷ் மாமன்  இவங்கள கூப்டைய பா?"

"அவங்க கிட்ட நான் சொல்லிக்குவேன். நீ வரும் பொது அவங்களை இழுத்துகிட்டு வந்திரு பா..."

"வேல்முருகன்ணன் வாராறா?"

"அத ரமேஷண்ணன் கிட்டதான் கேக்கணும்!"

"சரி அவர் வந்தா.. நானும் வாறேன்"

"அவர் வராட்டியும், நீ வா பா.."

"ஆங்... சரி ..  வாறேன். ஆமா சௌந்தரு... இந்த வி.ஏ.ஓ. டெஸ்ட் ல ஒரு 170 மார்க் வாங்கிருவேன் . வேலை கெடைக்குமா சௌந்தரு?" 

"கொஞ்ச நாள் பொறு கவுன்டிங் முடிஞ்சதும் 'முதல்வர்'கிட்ட கேட்டு சொல்றேன். இப்போதை நீ கோயில் கொடைக்கி வர்றதுக்கான வழியப்பாரு.."

                                                                                                                                 

"என்ன ராசு?! என்ன பண்ற?"

"ராஜாண்ணே! நான் ப்ளாக்கர் ஆகிருக்கேன்னே! அதன் முதல் பதிவ ரெடி  பண்ணிகிட்டிருக்கேன்!"

"அப்டியா?! ரெம்ப சந்தோசம். உன் பதிவ யாரவது திருடி அவங்க பதிவுல போட்டாங்கனா, என்ன பண்ணுவ டா?"

"அட..போங்கண்ணே! முதல்ல இத யாரவது படிகிறாங்களான்னு பாப்போம்!".